ஈசன் கல்வி அகம் – தோற்றம்

ஈசன் கல்வி அகம் – தோற்றம்

ஈசன் கல்வி அகம்

“கேடில் விழுச்செல்வமாம் கல்வி

நாட்டில் அனைவருக்கும் கிடைக்கிறதா?”

நாளும் வசதிக்கேற்ற நால்வகை கட்டணங்கள்,

  வாடும் ஏழைக்கு ஒரு வசதியும் இங்கு இல்லை.

அதுவும்,

  சேற்றில் கால் வைத்து

  குருதியை நீராய் பாய்ச்சி

  அன்பாய் உயிரை விரைத்து வாழ்க்கையை நாற்றங்கால் நட்டி

  சோறு போடும் என் தாய்க்கும்

  தகப்பனான என் விவசாயிக்கு

உயர் கல்விக்கு வழியில்லை இங்கே

இந்த வலியை போக்கவே ,

  வாழ வழிகாட்டும் வாழ்க்கை கல்வி

  ஏழை எளியோர்க்கும் உயர்த்தர கல்வி

  உயிர் நிலையில் வாழ ஒழுக்கத்துடன் கூடிய கல்வி

  இதை உருவாக்கவே இந்த உயிரும் மனமும்

  அதுவே இந்த “ஈசன் கல்வி அகம்”.

1998-ம் ஆண்டு , கடலூரிலிருந்து, பிரசன்ன தேவி என்ற பெண்மனி செய்தி தாள் மூலம் உயர் கல்வி தொடர , அளித்த வேண்டுதலுக்கு உதவிய தருனத்தில் உதித்தது இந்த உணர்வு…

முகம் தெரியாத அந்த பெண்மனி செய்தித்தாளில் கொடுத்த அந்த பதிவை பார்த்த தருனம் – இந்த நிகழ்வுதான் ஈசன் கல்வி அகத்தின் ஆனி வேராய் அமைந்தது.

தான் பயின்ற காலத்தில் சந்தித்த கஸ்டங்கள் , தடைகள் பொதுவாக வருமையின் காரணமாக ஏற்ப்பட்ட தயக்கங்கள், இந்த உயிரையும் பாதிக்ககூடாதென்ற பெரும் அன்பின் ஊற்றால் அந்த தருனத்தில் தன்னால் முடிந்த ஒரு சிரு தொகையை திரு.பொன். முருகன் அவர்கள் அனுப்பி வைத்தார்.

இதன் பதிலாய் பிரசன்ன தேவியிடமிருந்து பெறப்பட்ட மறு கடிதம்..

இதில் ஏற்பட்ட மகிழ்ச்சி நெகிழ்ச்சி மன நிறைவு இன்னும் பல உயிர்களுடன் கலந்து இன்றும் பேரானந்தமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

Scroll to Top