எங்களைப் பற்றி

ஈசன் கல்வி அகம் 

ஈசன் கல்வி அகம் ,ஈசன் ஆப்டிக்ஸ் நிறுவனர் திரு.பொன். முருகன் அவர்களால் நிறுவப்பட்டு வழி நடத்தப்படு வருகிறது.  1998 – ஆம் ஆண்டு முகம் தெரியாத ஒரு பெண்ணின் கல்வி உதவி வேண்டுதலுக்கு உதவிய தருனத்தில் உதித்த இந்த உண்ர்வு இன்றும் பல உயிர்களுடன் கலந்து நடை பெற்று கொண்டு வருகிறது.

வெறும் கல்வி தொகை உதவி மட்டுமல்ல எங்கள் நோக்கம். ஈசன் கல்வி அகம் தன்னை நாடும் ஒவ்வொரு நபர்க்கும் ஒழுக்கத்துடன் கூடய சிற்ந்த கல்வியை தருகிறது மற்றும் எந்த சூழ்நிலையிலும் சமுதாயத்தில் சிறந்த உள்திறமை மற்றும் நேர்மையான தன்மையுடையவர்களாய் வளர்வதற்கான பண்புகளை கற்றுத்தருகிறது.

சாதி மத பேதமில்லாமல் அனைத்து உயிர்களையும் அன்பாய் நேசித்து அரவனைக்கும் விதத்தில் இதன் செயல்முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிறுவனர் – திரு.முருகன் 

esun-educational-home-founder-murugan ஈசன் கல்வி அகத்தின் நிறுவனர்                  திரு.பொன். முருகன் அவர்கள் , திருவண்ணாமலை மாவட்டம் , சிறுவள்ளுர் கிராமத்தில் 01-05-1972 –ம் ஆண்டு , திரு பொன்னுசாமி மற்றும் திருமதி.பூமல்லி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சாதாரன விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் , சிறுவயதிலிருந்தே படிப்போடு வருமையின் பிடியில் விவசாய பணிகளுக்கும் ஈடுபடித்திக்க தேவையிருந்த்து.

தனது குழந்தைகால படிப்பை சிறுவள்ளுர் கிராமத்தில் உள்ள , தங்கவேல் உடையார் நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் துவங்கியவர் , தனது 8 – ம் வகுப்பை 1985 – ம் ஆண்டு முடித்தார். மேல்நிலை கல்வி தொடர அருகிலிலுள்ள ஆதமங்கலம்புதூர் செல்ல தேவையிருந்த்து.

சிறுவள்ளுர் கிராமத்தில் இருந்து ஆதமங்கலம்புதூர் 5 கி.மீ. தினமும் நடந்து சென்று நடந்தே வந்தார். 1987 – ம் ஆண்டு ஆதமங்கலம்புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 –ம் வகுப்பும் , 1989 – ம் ஆண்டு 12 – ம் வகுப்பும் படித்து முடித்தார்.

தனக்கு ஒழுக்கமும் கல்வியையும் போதித்த , தான் வணங்கும் வாழும் கடவுள்களாக இருந்த ஆசிரியர்கள் , தனக்குள் ஏற்படுத்திய ஆழ்ந்த அனுபவங்களால் தானும் ஆசியராக வேண்டும் என்பதே அவரின் எண்ணமும் ஆசையுமாக இருந்தது.

எவ்வளவு முயன்றும் ஆசிரியர் கல்லூரியில் சேர முடியாத நிலையில் தான் , எழும்பூர் அரசு கண் விழி ஒளி பரிசோதகர் கல்லூரியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் மூத்த மாணவர்களால்  அதையரியப்படுத்ததினால் பாதியிலேயே படிப்பை துரக்கும் நோக்குடன் விவசாயமே செய்து விடலாம் என்ற எண்ணத்துடன் திரும்பி வந்த அவர் தன் அப்பாவின் கட்டளையினாலும் அவர் அறிவுரையினாலும் மீண்டும் கல்லூரிக்கு சென்று ஒரு சிறந்த கண் பரிசோதகரானார்.

தான் சந்தித்த தடைகள், கஸ்டங்கள் தன்னை சுற்றியுள்ள தன் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு நிகழா வண்ணம் , கல்வி உதவி புரிய ஆரம்பித்தது ,  இன்றும் பல உயிர்களுடன் கலந்து , அன்பாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது.