வேண்டுகோள்

வணக்கம் ,

என்னை ஈன்ற தாய், தந்தையரின் பரிபூரண ஆசியாலும் ,  யான் கல்வி பயின்ற கல்விக்கூடங்களை திருகோயில்களாகவும் ,  எனக்கு கல்வி போதித்த குருமார்களை இத்திருக்கோயில்களில் வீற்றிருக்கும் இறைவனாகவும் நான் வணங்குகிறேன்.

ஆகையால் என் குருமார்களின் ஆசிர்வாதத்தினாலும் தற்பொழுது சூரியன், சந்திரன், ஈசன் (Sun, Moon, Esun) ஆக உருபெற்று  மக்களுக்கு கண்பார்வை சேவையும் , கல்விச்சேவையும் இந்த ஈசன் குழுமம் மூலம் செய்து வருகிறோம்.

இந்த ஈசன் குழுமம் மேன்மேலும் பல்லாயிரம் எழுச்சிமிகு இளைஞர்களை தரமான கல்வி மூலமே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் செய்து வருகின்றோம். இந்த சேவை மேன்மேலும் அதிகரிக்க உங்களில் அனைவரின் மனம் ஆழ்ந்த வாழ்த்துக்களை மட்டுமே எதிர்நோக்கி இருக்கும் உங்களில் ஒருவனான ..

விவசாயி மகன்,

பொன்.முருகன்.  கண் பார்வை பரிசோதகர்.

Scroll to Top